கரவெட்டியில் கன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் கரவெட்டி கோவில் சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரவெட்டி மத்தியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றஜீகரன் (வயது 21) ௭ன்ற இளைஞன் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனச் சாரதியை நெல்லியடிப் பொலிஸார் கைதுசெய்ததுடன் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment