Sunday, May 13, 2012

மரண அறிவித்தல்


 

தாயின் மடியில்:18.12.1932
                                                      காலனின் பிடியில்:12.05.2012

திருமதி.முருகேசு சிவபாக்கியம்(பாக்கியம்)
கனடா ஒன்ராறியோ
சோளங்கன், கரணவாய் மேற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு சிவபாக்கியம் அவர்கள் 12.05.2012(சனிக்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற திரு.திருமதி மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் புதல்வியும், கந்தவனம் நல்லபிள்ளை தம்பதிகளின் மருமகளும், அமரர் முருகேசு(சபாரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்

அமரர்களான கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், செல்லத்துரை,திருநாவுக்கரசு மற்றும் கதிரிப்பிள்ளை, சின்னமணி ஆகியோரின் சகோதரியும். ஆயம், திரவியம், வி.எஸ்.தமோதரம்பிள்ளை ஆகியோரின் மைத்துணியும்,  மற்றும் காலம் சென்ற இராசம்மா, சின்னத்துரை, கந்தசாமி மற்றும் செல்லப்பாக்கியம் ஆகியோரின் மைத்துணியும்

சாரதாதேவி, சகுந்தலாதேவி, விமலதாசன், கணேசதாசன் ஆகியோரின் அன்பு அம்மாவும், சிவஞானம், யோகநாதன், நாளாயினி, செல்வமலர் ஆகியோரின் மாமியும்

ஜெனகன் (பொறியியலாளர் CISCO), சாதனா(Ryerson University – Toronto  இறுதியாண்டு மாணவி), சிந்துஜன் (Ryerson University – Toronto  முதலாம் ஆண்டு மாணவன்), சிந்துகா ஆகியோரின் அம்மம்மாவும், மோகனதாஸ், விதுஷா மற்றும் தமிழினி, யாழினி, தர்மினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் எதிர்வரும் சனிக்கிழமை Chapel Ridge Funeral Home > 8911 Woodbine Avenue>  Markham, Ontario L3R 5G1 என்ற முகவரியில் மாலை 4:00 மணி தொடக்கம் 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் காலை 8:00 மணி தொடக்கம் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டு அதே மண்டபத்தில் 9:00 மணி தொடக்கம் 11:00 மணிவரை இடம்பெற்று பின்னர்

 "Elgin Mills Crematorium" 1591 Elgin Mills Road, Richmond Hill, Ontario L4S 1M9.;  தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகட்கு:
சாரதாதேவி- கனடா 416-754 2494
சகுந்தலாதேவி-கனடா 416-804 1445
விமலதாசன- கனடா 416-899 3213
கணேசதாசன்-கனடா 416-875 5296

No comments:

Post a Comment