Sunday, January 15, 2012

வடமராட்சியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

வடமராட்சியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை வடமராட்சி நெல்லியடி சந்தைக்கு மரக்கறிகளைத் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீட்டின் மதிற்சுவர் மீது மோதியதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  வல்லியாவத்தை கரணவாயைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்லன் கேதீஸ்வரன் (வயது 37) என்ற குடும்பஸ்தரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து நெல்லியடி காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

No comments:

Post a Comment