Friday, August 12, 2011

கரணவாய் மகா வித்தியாலயத்தின் கணனிக்கூடம்

கரணவாய் மகாவித்தியாலயம் கல்வி, விளையாட்டுத்துறை என தேசிய ரீதியில் பல சாதனைகைள நிலை நாட்டியுள்ளது. கணித பாடத்தில் சாளினி என்ற மாணவி தேசிய ரீதியில் பங்கு பற்றி பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். புலம்பெயர் தேசங்களில் இருந்து நாடு திரும்பிய பழைய மாணவர்கள்  பலரது உதவியினால் கணனி கூடம், பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை என்று பல்வேறு உதவிகளை பாடசாலை அதிபர் வெளிநாடுகளில் வசித்து தாயகம் வந்து சென்ற பழைய மாணவர்களின் உதவியுடன் வழங்கி வருகின்றார்.

அவ்வாறு உருவாக்கப்பட்டதில் ஒன்றுதான்  இந்த கணனிக்கூடம். கணனி கற்றலுக்குரிய சகல ஏற்பாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு, வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நம் ஊரின் சிறார்களும் தகவல் தொழில்நுட்ப கல்வி அறிவையும் பெற்று வளர்ச்சியடைய பாடசாலை அதிபரும், ஆசிரியரும் ஊக்கமெடுத்து வருகின்றனர். இவர்களது இந்த முயற்சிக்கு புலம்பெயர் தேசங்களில் வாழும் பழைய மாணவர்களும், ஊரின் மைந்தர்களும் மேன் மேலும் உதவிடவேண்டும்.

No comments:

Post a Comment