இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் சாவகச்சேரி தபால் கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கரணவாய் மத்தி கரவெட்டியைச் சேர்ந்த ஆர்.விஜியதாசன் (வயது-20) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். இவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனத்துடன் இடையில் குறுக்கிட்ட மோட்டார் சைக்கிள் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றுக் காலை 6.00 மணியளவில் கைதடிப் பாலத்தில் கார், ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோ பலத்த சேதத்திற்கு உள்ளானது.
No comments:
Post a Comment