Wednesday, June 1, 2011

கையடக்கத் தொலைபேசிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் : சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கையடக்கத் தொலைபேசி பாவனையானது புற்று நோய் அபாயத்தை தோற்றுவிக்கின்றது என சர்வதேச சுகாதார ஸதாபனம் அறிவித்துள்ளது. மேலும் கிளியோமா எனப்படும் ஒரு வகை மூளையில் ஏற்படும் கட்டிக்கும் காரணமாகின்றதென அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

தற்போது கையடக்கத் தொலைபேசிகளானது 'Carcinogen' எனப்படும் நேரடியாக புற்றுநோயைத் ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் கையடக்கத் தொலைபேசிகளானது நவீன தொழிநுட்ப சாதனமென்பதினால் இவற்றின் பாதிப்புக்கள் தொடர்பில் தெரிந்துகொள்ள நீண்ட காலம் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி முடிவானது 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வையடுத்தே வெளியிடப்பட்டுள்ளது.

பல நாட்களாக கையடக்கத் தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதா என்ற விவாதம் நீடித்து வந்த நிலையில் இம்முடிவு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment