மனைவியின் ஈமெயிலிற்குள் ஊடுருவிய குற்றச்சாட்டிற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 5 வருட சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளார். மனைவி தன்னை ஏமாற்றுவதாக சந்தேகித்ததைத் தொடர்ந்தே மனைவியின் ஈமெயிலிற்குள் ஊடுருவியதாக 33 வயதுடைய லியோன் வால்கர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவியின் முன் அனுமதி இன்றி அவரது ஈமெயிலிலுள்ள தகவல்கள் மற்றும் கடிதங்களைப் பார்வையிட்டமைக்காக ஊடுருவல் தடைச் சட்டத்தின் கீழ் லியோன் வால்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வால்கரைத் திருமணம் செய்வதற்கு முன்னர் ஏற்கனவே இருதடவைகள் திருமணம் செய்த வால்கரின் மனைவி தனது முன்னாள் கணவருடன் தொடர்புகளை பேணுவதாகச் சந்தேகம் எழுந்ததையடுத்து வால்கர் தனது மனைவி கிளாராவின் ஈமெயிலிற்குள் ஊடுருவியுள்ளார். அத்துடன் தனது மனைவி தன்னை ஏமாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வால்கர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment