Thursday, October 14, 2010

மதுரை மீனாட்சி அம்மனில் நவராத்திரி பூஜை வழிபாடு


வடமராட்சியின் கரணவாய் மேற்கு சோளங்கனில் வீற்றிருக்கும் "மதுரை மீனாட்சி அம்மனில்" நவராத்திரி விரத வழிபாடுகள் ஆண்டுதோறும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாண்டு ஆலயத்தின் மூலஸ்தான வேலைகள் இடம்பெற்று வருவதால் சிறிய பூஜையுடன் நவராத்திரி விழா இடம்பெறவுள்ளது. நவராத்திரி ஆரம்பநாள் அன்று ஆலயத்தில் கும்பம் வைக்கப்படும்போது நவதானியங்கள் விதைக்கப்படும், அவ்வாறு விதைக்கப்படும் நவதானியங்கள் எந்த திசையில் அதிக வளர்ச்சியை காட்டுகின்றதோ அந்த திசையில்தான் விவசாயம் வளர்ச்சி பெறும் என்பது கூட ஆலயத்தின்  ஜதீகம். ஆண்டு தோறும் ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைவழிபாடுகள் இடம்பெற்று சிறுவர், சிறுமியரின் தேவார பண்ணிசையுடன் இனிதே இடம்பெற்று இறுதி  விஜயதசமியன்று வாழைவெட்டு இடம்பெற்று வெட்டப்பட்ட வாழையை சிறுவர்கள் ஊர் முழுவதும் இழுத்து சென்று மகிழ்வர்.


நவராத்திரி காலத்தில் சோளங்கன் வாழ் இளம் பெண்;கள் மற்றும் சிறுமிகள் ஒன்பது நாட்களும் விரதமிருந்து நவராத்திரியை சிறப்பாக அனுஷ்டித்து இறுதி நாள் அன்று பாறணை செய்து விரதத்தை இனிதே கடைப்பிடிப்பர். ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்ற முதுமொழிக்கு அமைய விவாசாய கிராமமான எமது கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், பள்ளி மாணவர்களும் இவ் ஆலயத்தை வழிபட்டுவிட்டே தமது அன்றாட பணிகளை மேற்கொள்வர். தோட்டத்தில் புதிதாக பயிரிடுவதாக இருந்தால் என்ன, அறுவடை செய்வதாக இருந்தால் என்ன, பாடசாலை சென்று பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களாகட்டும், வெளிநாடு செல்ல எண்ணுபவர்களாட்டும், நற்காரியங்களை முன்னெடுக்க விரும்பும் எவரும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டே தமது கடமைகளை முன்னெடுப்பர்.


இவ்வாறான இந்த ஆலயத்தில் பங்குனி திங்கள், சித்திரை பௌர்ணமி, என்றும் ஆவணி மாதத்தில் இடம்பெறும் ஆலயத்தின் 10 நாள் திருவிழா, நவராத்திரி பூஜை என்று இங்கே விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஊர் முழுவதுமே பக்தி பூர்வமாக திகந்துவரும் அம்மனுக்கு விரதமிருந்து அம்மாளின் மகிமையை பெறுவர். ஆலயத்தின் மூலஸ்தான வேலைகள் இடம்பெற்று வருவதால் அவற்றை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு நிதிபற்றாக்குறையாக இருப்பதால் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஊரவர்கள் இதற்கு உதவிபுரிந்து ஆலயத்தின் சிறப்பை முன்னெடுக்க உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

-ஆலய பரிபாலனசபை

3 comments:

  1. சோளங்கன் இணைய வருகைக்கு எனது மனமார்ந்த வரவேற்புகள்.
    ரவி பரமேஸ்வரன்

    ReplyDelete
  2. எமது ஊரின் மகிமையை கணனி உலகிற்கு எடுத்துவந்த எனது மண்ணின் மைந்தருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

    -தறுமன் டென்மார்க்

    ReplyDelete
  3. இணையத்தை உருவாக்கி ஊரின் மகிமையையும், ஆலயத்தின் அருளையும் வெளிபபடுத்திய மண்ணின் மணம் மாறமல் இன்றுவரை ஊரின் வாஞ்சையுடன் வாழும் எனது ஊரின் மைந்தனுக்கு எனது நல்வாழ்த்துக்கள்,தொடரட்டும் தங்கள் பணி.

    -சோளங்கன் வாழ் அன்பன்

    ReplyDelete