எமது சமூகம் எமது குடும்பம் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்ற பொறுப்பற்ற செயற்பாடு எதிர்கால இளைஞர் யுவதிகளையும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும். கிராமத்தில் அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவர் அல்லது ஒர் இளைஞர் குழு செய்யும் இவ்வாறான செயற்பாடு ஒரு கிராமத்தினையும் குடும்பத்தையுமே பாதிப்பதுடள் வளர்ந்துவரும் எமது எதிர்கால சமூகத்தையுமே பிழையான பாதைக்கு கொண்டு செல்கின்றது.
முன்பெல்லாம் முதியவர்கள் பெரியவர்களிற்கு மதிப்பு மரியாதை கொடுத்து அப்போதைய இளைஞர்கள் அச்சம் கொள்வார்கள். இப்போதெல்லாம் அண்ணனின் பிறந்தநாள், தம்பியின் பிறந்தநாள், திருமண நிகழ்வு, பெண்கள் வயதுக்கு வந்த நிகழ்வுகள், இளவு வீடு என்று எதிலுமே மதுபானத்தை வாங்கி கொடுக்கும் நிகழ்வு வளக்கமாகிவிட்டது.
எவ்வளவு பெரிய ஆபத்தை சமூகத்திற்கும் எமது எதிர்கால வாரிசுகளிற்கும் ஏற்படுத்துகின்றது என்ற பொறுப்பை உணராதவர்களாக இவ்வாறான செயற்பாடுகளிற்கு ஊக்கமளித்து வருகின்றனர். "பெடியளுக்கு பாட்டி" என்ற பெயரில் வெளிநாட்டு பணத்தில் மோகம் கொள்ளும் இல்லத்தரசிகளே உங்களது இவ்வாறான செயற்பாடுகளால் நாளைக்கு உங்களது பிள்ளையும் மதுவுக்கும் சமூக சீரழிவுக்கு செல்வதற்கே வித்திடுகின்றீர்கள் என்பதை உணர்ந்துதான் இவ்வாறான சமூக சீரழிவுகளிற்கு உந்துதலாக இருக்கின்றீர்களா?
இன்று ஏற்பட்டுள்ள கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தினாலும் வறுமையினாலும் எத்தனை மனித உயிர்கள் பலியாகின்றன என்பதை உணர்ந்தவர்களாகதான் நீங்கள் இருக்கின்றீர்களா?
"குடி குடியை கெடுக்கும்" என்று எமது முன்னோர் சும்மாவா சொன்னார்கள். குடியினால் அல்லது மதுபான பழக்கத்தினால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து பிள்ளைகள்வேறு குடும்பம் வோறாக சின்னாபின்னப்பட்டு எதிர்காலமே சூனியமாகிபோனதை அறியாதவர்களாகவா இவ்வாறான செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கின்றீர்கள்.
இன்று இன்னொருவர் பிள்ளை நாளைக்கு உங்களது பிள்ளையும் இதனையே கைக்கொள்ளும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். உங்களிற்கு உங்களது உறவுகள் அண்ணன், தம்பியின் பிறந்தநாள் நல்லநாள் செயற்பாடுகளிற்காக ஏதாவது செய்யவேண்டும் என்று கருதினால் அந்த பணத்தை சமூக சீரழிவிற்கு தாரை வார்க்காமல் சிறந்த செயற்பாடுகளிற்காக செலவு செய்யுங்கள், எத்தனையே முதியோர் இல்லங்கள், தாய் தந்தையர் இல்லாமல் உறவுகள் எவருமே இல்லாமல் சிறுவர் இல்லங்களில் வாழும் சிறார்களிற்கான உணவுக்காக இவ்வாறான பணத்தினை செலவு செய்யுங்கள்.
அந்த செயற்பாடு உங்களையும் உங்களது அன்புர்க்கினியவர்களையும் உங்களது வருங்கால வாரிசுகளையும் வாழ வைக்கும். இன்றைய "வெளிநாட்டு பணம்" தான் பலரது வாழ்க்கையையும் கிராம இளைஞர்களின் வாழ்க்கையையும் சீரழிக்கின்றது என்ற பரவலான குற்றச்சாடுக்களிற்கு புலம்பெயர் உறவுகள் நீங்களும் துணைபோகாமல் பனியிலும், குளிரிலும், ஒடி ஒடி நித்திரையை தொலைத்து சம்பாதிக்கும் பணத்தினை அர்த்தபுஸ்டியாக ஆரோக்கியமான விடயங்களிற்கு செலவு செய்யுங்கள்.
அதுவே உங்களது எதிகால வாழ்வு சுபீட்சமாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கு துணை நிற்கும். ஊருக்கு பெயருக்கு "பாட்டி" வைத்தோம் என்று பெருமை கொள்ளாமல் சிறப்பான செயற்பாடுகளிற்கு ஊக்கமளித்து அவற்றினால் அகமகிழுங்கள்.
"கட்டுப்பாடில்லாமல் குடிப்பதும் குடியை பற்றியே எந் நேரமும் சிந்திப்பது கூட ஒருவித மனநோய்" என்கின்றனர் மனநலஆய்வாளர்கள்.

No comments:
Post a Comment