நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு 7:15 மணியளவில் இமையாணன் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். இமையாணன் சந்தியில் இடம்பெற்ற இவ் விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 60வயதுடைய துரையன் என்பவரே படுகாயமடைந்தார்.
மிகவும் ஆபத்தான நிலையில் மந்தியை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மேற்படி வயோதிபர் சிகிச்சைபலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வயோதிபர் வீதியால் நடந்துகொண்டு சென்றபோதே மோட்டார் சையிக்கிள் மோதியதாகவும் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் நெல்லிடி பொலிசார் மோட்டார் சையிக்கிள் சாரதியை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment