Wednesday, April 8, 2020

சமூக இடைவெளியை புறக்கணிக்கும் இளைஞர்கள்!

கொரோனா என்ற கொடிய வைரஸ்  தொற்றினால் உலகமே முடக்கநிலையில்,  இந்த கொடிய நோயில் இருந்து தமது மக்களை பாதுகாக்க கடும் பிரயத்தனம்  மேற்கொண்டு வருகின்றன. வைத்தியர், தாதிமார் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.  அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து  வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.



சமூக இடைவெளியை  கடைப்பிடிக்குமாறு  மீண்டும் மீண்டும்  அரசுஅறிவித்து வருகின்றது.  இவை எதனையும்  பொருட்படுத்தாமல் கிராமபுற  இளைஞர்கள்  ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம், பாட்டி  பைலா என்று, இவர்களிற்காக தான் அரசு அவசர நிலையை  பிரகடன படுத்தியது போன்று நடந்து கொள்கின்றனர்.

சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறலாமா?  உலகமே  பாரிய அச்சுறுத்தலை  எதிர்கொண்டும்  நோய்  தொற்றில் இருந்து மீள் எழுவதற்கு  பாரிய பிரயத்தனம் செய்கின்றது.  “எம்மை பற்றிய கவலை  இல்லாவிட்டாலும்  பிறர் குறித்து சிந்திப்போம்”.  காற்றுடன் பரவும் கொடிய நோய் பல ஆயிரக்கணக்கானவர்களை தினமும் பலி கொண்டு வருகின்றது.

தயவு கூர்ந்து  உலக சுகாதார அமைப்பு உட்பட அரசுகளும் சுகாதார நிறுவனங்களும்,  விடுக்கும் வேண்டுகோளை  செவிமடுப்போம். “நம்மையும் பாதுகாத்து  பிறரையும் பாதுகாத்திடுவோம்”  சமூக இடைவெளியை பேணிடுவோம்.  தயவு செய்து  உலகின்  நிலையை உணர்ந்து ஒவ்வொருவரும்  பொறுப்புடன் செயலாற்றிடுவோம்.

No comments:

Post a Comment