கனேடிய உறவுகளின் நிதி உதவியில் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு கரணவாய் தெற்கு மேற்கு பிரிவுக்குட்பட்ட அந்திரான், நொத்தாரிசு தோட்டம் ஆகிய இடங்களில் 100 குடும்பங்களிற்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தினசரி கூலி வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்த இப்பகுதி மக்கள் கொரோனா அச்சுறுத்தல் பின்னணியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் செயற்பட்டுவரும் "நம் உறவுகளுக்கு நாமே கைகொடுப்போம்" என்ற தன்னார்வ அமைப்பின் ஊடாக கனேடிய உறவுகள் சேகரித்து அனுப்பிய மூன்று இலட்சம் நிதியில் தலா 3000 ஆயிரம் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் நூறு குடும்பங்களுக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment