வல்லை கடல் நீரேரி பகுதியில் இருந்து ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த நெல்லியடி பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை, பொன்னைய்யா வீதியை சேர்ந்த 67வயதுடைய திருநாவுக்கரசு தயானந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மனநோய் பாதிக்கப்பட்ட இவர் உடுப்பிட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற இவர் நேற்று புதன்கிழமை கடல் நீர் ஏரி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

No comments:
Post a Comment