Saturday, August 25, 2018

நெல்லியடியில் மோட்டார் சையிக்கிள் விபத்து இருவர் படுகாயம்!

நெல்லியடி நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நெல்லியடி நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சையிக்கிள்களில் ஒன்று தீடிர் என்று திருமகள் சோதி வீதிப்பக்கம் திருப்ப முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சையிக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் இரண்டு மோட்டார் சையிக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment