போதிய பொலிஸார் இல்லாத நிலையில் இயங்கிவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு போதியளவு பொலிஸாரை நியமிக்கவேண்டும் என தெரிவித்தார் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி கொனரா.
நெல்லியடி பகுதியில் அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவது குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்இ வீதி விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதற்கு சாரதிகளே காரணம். வுhகனங்களை சாரதிகள் மித மிஞ்சிய வேகத்தில் செலுத்துகின்றனர்.
இதனால் வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனால் உயிரிழப்புக்களும் ஏற்படுகிறது. இயன்றவரை மோட்டார் சையிக்கிள்களை செலுத்துவோர் மீண்டும் வீட்டிற்கு செல்ல வேண்டும். என்ற சிந்தனையில் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும்.
போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவதற்கு போதிளயவு பொலிஸார் இல்லை. தற்போது 4 போக்குவரத்து பொலிஸார் மட்டுமே கடமையில் உள்ளனர்.
இது தவிர ஆலய உற்சவ கடமைகளுக்கும் பொலிஸார் சென்றுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து பொலிஸாரும் மற்றைய பிரிவுகளில் கடமையாற்ற தமிழ் பொலிஸார் உட்பட மேலதிக பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment