Thursday, April 12, 2018

வடமாராட்சி அத்தாயில் ஆட்டு திருடர்கள் மோட்டார் சையிக்கிளையும் கைவிட்டு தப்பியோட்டம்!

ஆடு திருட வந்த திருடர்கள் மோட்டார் சையிக்கிளையும் கைவிட்டு விட்டு ஒடிய சம்பவம் அல்வாய் கிழக்கு அத்தாய் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு அத்தாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடன் ஒருவர் அங்கிருந்த ஆட்டை திருட முற்பட்டுள்ளார். இதை அவதானித்த வீட்டுக்காரர் சத்தமிட்டதுடன் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

பொலிஸார் அங்கு விரைந்த போது ஆடு திருடவந்தவர் மோட்டார் சையிக்கிளையும் கைவிட்டு தப்பியோடியுள்ளார். மீட்கப்பட்ட சைக்கிள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரiணையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment