Saturday, May 6, 2017

நெல்லியடியில் திருட்டு சி.சி.டி கமராவில் சிக்கிய திருடன்!

வங்கிக்கு சென்ற பெண்மணி ஒருவரின் அறுந்து விழுந்த தங்கச் சங்கிலியை மதிநுட்பமான முறையில் களவாடிய நபர் ஒருவர் சி.சி.ரீவி கமராவின் உதவியுடன் மாட்டிய சம்பவம் நெல்லியடிப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.

நெல்லியடியில் தனியார் வங்கி ஒன்றுக்கு பெண்மணி  ஒருவர் பணம் பெறச் சென்றுள்ளார்.

அவர் பணம் பெறும் பகுதியில் வரிசையில் நின்ற போது  அவரது தங்கச் சங்கிலி அறுந்து விழுந்துள்ளது.

இதனையறியாத பெண்மணி பணத்தினைப் பெற்றுக் கொண்டு வெளியில் சென்று பார்த்த போது  சங்கிலியை காணாது  திகைப்படைந்து திரும்ப வங்கிக்கு வந்து பின்னர் நின்ற நபரை இதுவிடயம் கேட்டுள்ளார்.அவரோ தான் அவ்வாறு செய்யவில்லை. தனக்குத் தெரியாது என பெண்மணியுடன் விதண் டாவாதம் புரிந்ததாக கூறப்பட்டது.

இதனையடுத்து அப்பெண்மணி நெல்லியடிப் பொலிஸில் முறைப் பாட்டை  பதிவு  செய்தார்.

இதனையடுத்து வங்கி அதிகாரி அங்கிருந்த சிசிரிவி கமராவை  சோதனையிட்ட போது   மேற்படி பின்னால் சென்ற  நபர் தனது வேட்டியை கீழே இறக்கி விட்டு சங்கிலியை   எடுப்பது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அவரை வரவழைத்த போது வேறு ஒரு நபருடன் வந்த குறித்த நபர் சங்கிலி எடுக்க வேண்டிய தேவையில்லை. தான்  எடுக்கவில்லை எனவும் வங்கி அதிகாரியிடம் முரண்பட்டுள்ளார்.

வங்கி அதிகாரி கமராவில் பதிவான காட்சியை காண்பித்த  போது குட்டு அம்பலமானதை உணர்ந்த அவர்கள் 70,000 ரூபாய் தங்கச் சங்கிலிக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு சமரசத்துடன் அங்கிருந்து நழுவியுள்ளனர்.

No comments:

Post a Comment