நெல்லியடி மத்திய பேரூந்து நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தருவதாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் அளித்த வாக்குறுதி காற்றில் பறந்த நிலையில் நெல்லியடி வர்த்தக சங்கத்தின் முயற்சியால் குழாய்கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இப்பேரூந்து தரிப்பு நிலையலத்தில் குடிநீர் வசதி அற்றநிலையில் காணப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கரவெட்டி பிரதேச சபை, கரவெட்டி பிரதேச செயலகம், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் போன்றோரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடப்பட்ட நிலையில் இதனை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதே தவிர எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
இவ் வாக்குறுதிகள் காற்றில் பறந்த நிலையில் நெல்லியடி வர்த்தக சங்க செயலாளர் மொபிட்டல் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் அவர்களின் அனுசரணையுடன் இக் குழாய்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது.
No comments:
Post a Comment