Friday, April 21, 2017

வீதியில் குப்பையை கொட்டி வளமாக மாட்டிக்கொண்ட சம்பவம்!

கரவெட்டி விக்கினேஸ்வரா வீதி பகுதியில் குப்பைகளைக் கொட்டிய பலர் குப்பைக்குள் இருந்த கடித தலைப்புக்களின் மூலம் மாட்டிக்கொண்டனர்.

மேற்படி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக கரவெட்டி சுகாதார பகுதியினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதோஸ்குமார் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான குழுவினர் மேற்படி பகுதியில் உள்ள குப்பைகளை சோதனையிட்டனர்.

இதன்போது கடித தலைப்புககள், மின்சாரபட்டியல் போன்ற மீட்கப்பட்டன. அதனடிப்படையில் 37பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment