வடமராட்சி தெற்கு மேற்கு பிரிவுக்குட்பட்ட கரவெட்டி, கரணவாய், உடுப்பிட்டி பகுதிகளிலுள்ள வீதிகள், ஒழுங்கைகள், வாய்க்கால்களுக்குள் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகளை வீசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சுதோகுமார் அறிவித்துள்ளார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கையில் கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்களும் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், நெல்லியடி பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசசபை சிற்றூளியர்கள், வர்த்தக சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கிராம மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சுதோகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment