Saturday, November 21, 2015

உங்கள் படுக்கையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிகள்!!!

வீட்டை சுத்தமாக வைக்கவில்லை என்றால் தேவையற்ற விருந்தாளிகளான மூட்டை பூச்சிகளுக்கு அது வீடாகி போகும். மோசமான இந்த பூச்சி உங்கள் வீட்டிற்கு துர்நாற்றத்தை அளித்து, ஒவ்வொரு மரச்சாமான்களையும் அழித்து விடும்.


கீழ்கூறிய எளிய வீட்டு முன்னேற்ற டிப்ஸ்களைப் பின்பற்றி படுக்கையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். படுக்கை போர்வையை நேராக்குதல், போர்வைகளை சுத்தப்படுத்துதல், தலையணை உறைகளை வாரத்திற்கு இரு முறை மாற்றுதல் போன்ற சிலவற்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வீட்டை சுத்தப்படுத்தும் டிப்ஸ்கள், குறிப்பாக படுக்கையறைக்கான டிப்ஸ்கள்.

போர்வைகளை மாற்றுதல் 

உங்கள் படுக்கையின் போர்வைகளை வாரத்திற்கு இரு முறை மாற்ற வேண்டும். பருவகால துணி வகையைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் வீட்டில் உங்கள் சொகுசுக்கேற்ப அது அமையும். உதாரணமாக, கோடைக்காலத்திற்கு காட்டன் வகை, குளிர் காலத்திற்கு சில்க் வகை. ஃபர் போன்ற வெதுவெதுப்பான வகையையும் கூட பயன்படுத்தலாம். ஆனால் அதில் தூசி வந்து அடையும்.

தலையணைகளைத் தட்டுதல் 

ஒவ்வொரு நாள் காலை எழுந்தவுடன், போர்வையை நேராக்கி, தலையணைகளைத் தட்டி வைக்கவும். பொடுகு போன்ற தலைமுடி பிரச்சனை இருந்தால் தலையணை உறைகளையும் வாரத்திற்கு மூன்று முறையாவது மாற்ற வேண்டும்.

மெத்தையை தட்டி விடுதல் 

மாதமொருமுறை மெத்தையை நன்றாக தட்ட வேண்டும். இப்படி செய்வதால் மெத்தையில் பூச்சிகள் அண்டாமல் இருக்கும். மேலும் உங்கள் முதுகிற்கும் கூட இது பயன் தரக்கூடியதாக அமையும். அதற்கு காரணம், மெத்தையை தட்டுவதனால், ஃபோமில் உள்ள நாரின் அளவு சீராகும்.

படுக்கையை வாக்யும் மூலமாக சுத்தப்படுத்துதல் 

படுக்கையை சுத்தப்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் அதனை வாக்யும் மூலம் சுத்தப்படுத்துதல். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க நல்லதொரு வாக்யும் கிளீனரை வாங்குங்கள்.

சரியான போர்வையைத் தேர்ந்தெடுங்கள் 

உங்கள் படுக்கைக்கு சரியான வகையிலான போர்வையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். அதிகமாக தூசி சேர்கின்ற வகையிலான போர்வையில் காசை செலவிடாதீர்கள். இது அலர்ஜி மற்றும் இதர சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

உணவு பொருட்களைக் கொண்டு வராதீர்கள் 

படுக்கையை சுத்தப்படுத்தும் டிப்ஸ்களில் முக்கியமான ஒன்று, உணவு பொருட்களை அங்கே கொண்டு வராமல் இருத்தல். இதன் மூலம் தேவையற்ற பூச்சிகள் உங்கள் படுக்கைக்கு வராது.

No comments:

Post a Comment