Thursday, November 19, 2015

ஆலய தீர்த்தக்கேணியில் குளித்த இருஇளைஞர்களில் ஒருவர் பலி!


ஆலய தீர்த்தக் கேணியில் குளித்த இரு இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப் பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞன் வல்வெட்டித்துறை  ஊரணி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வடமராட்சி நெடியகாடு பிள்ளையார் கோவிலில் நேற்றுக் காலை 7 மணியளவில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

இதில் 26 வயதுடைய அல்வாய் வடமேற்கு அல்வாயைச் சேர்ந்த  எஸ். செந்தூரன் உயிரிழந்ததுடன் அல்வாய் கொற்றாவத்தையைச் சேர்ந்த ப.தவசியன் என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கேணியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த ப.தவசியன் கோவிலுக்கு  சென்றவர்களின் உதவியுடன மீட்கப்பட்ட நிலையில் செந்தூரன் என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார். 

இதனையடுத்து தவசியன் என்ற இளைஞன் ஆட்டோவில் உடனடியாக வல்வெட்டித் துறை ஊரணி வைத்தியசாலைக்கு அனுப்பி  வைக்கப்பட்டார்.
பிரஸ்தாப இளைஞனை ஏற்றிச் சென்ற ஆட்டோ மிக வேகமாக  சென்ற போது  திடீரென தடம்புரண்டு விபத் துக்குள்ளானது. இவ்விபத்தின் காரணமாக அவ் இளைஞனின் தலையில் படுகாயம்  ஏற்பட்டதுடன் ஆட்டோ கடுமையான சேதங்களுக்குள்ளானது.
தலையில் படுகாயமடைந்த இளைஞன் பொதுமக்களின் உதவியுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டான்.

ஆட்டோச் சாரதியும் சிறு காயங்களுக்குள்ளானார் எனவும் இதுதொடர்பான விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மீட்கப்பட்டவரின் சடலம் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக் கப் பட்டுள்ளது எனதெரியவந்துள்ளது. 

No comments:

Post a Comment