யாழ் கரணவாய் மகாவித்தியாலயம் விளையாட்டுதுறையில் மீண்டும் சாதனையை நிலை நாட்டுகின்றது. முன்னைய காலங்களில் அணிநடை போட்டி உட்பட 100,200,400 மீற்றர் ஒட்டப்போட்டிகளில் பங்கு கொண்டு வட்டார ரீதியில் வெற்றிவாகை சூடி, மாவட்ட ரீதியில் சிலர் சிறந்த வீராங்கனைகளாகவும் உருவாகினர்.
கால நீரோட்டத்தில் எமது நாட்டில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளமுடியாத துரதிஸ்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை மீண்டும் அதற்கு வழியமைத்துள்ளது.
சிறந்த மாணவ, மாணவிகளையும், வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கும் விதமாக பாடசாலை நிர்வாகமும் விளையாட்டுதுறை நிர்வாகமும் செயற்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் கடந்த 8ம்திகதி கொழும்பில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக யாழ் கரணவாய் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த தயாஞானம் சர்மிகா. உட்பட மேலும் மூன்று மாணவிகளுமாக நான்கு வீராங்கனைகள் தேசிய போட்டியில் பங்கு கொள்கின்றனர்.
இவர்கள் தேசிய ரீதியிலும் வெற்றிவாகை சூடி சிறந்த வீராங்கனைகளாக ஊர்திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

No comments:
Post a Comment