Saturday, October 10, 2015

இலங்கையில் 20-25 வீதத்தினர் மனநல நோயினால் பாதிப்பு!!!

மனித உள்ளத்துடன் தொடர்புபட்டதே மனநல நோய்
உலக மனநல தினம் இன்று. (10.10.2015)அதனை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
உலகில் வருடா வருடம் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினம் வெவ்வேறு தொனிப்பொருட்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருவது வழமையே. அந்த வகையில் இவ்வருட உலக மனநல தினத்தின் தொனிப் பொருள் ‘மனநல ஆரோக்கியத்திற்குக் கெளரவம் என்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது.


அதாவது மனநலக் குறைபாட்டுக்கும், மனநலப் பாதிப்புக்கும் உள்ளாகியுள் ளவர்களும். அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கெளரமாகவும், மரி யாதையாகவும், பார்க்கப்பட வேண் டும். பராமரிக்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்துவதையே இத் தொனிப்பொருள் பின்புலமாகக் கொண்டுள்ளது.
உலகில் மனநலக் குறைபாடும், மனநலப் பாதிப்பும் விசேடமான ஒன்றல்ல. ஏனைய நோய்களைப் போன்று மனநல குறைபாடுகளும், பாதிப்புக்களும் ஒரு வகை நோய் நிலைதான். அதாவது மனித உள்ளத்துடன் தொடர்புபட்ட நோய் நிலையே இது.
இந்நோய் நிலையில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பல கட்டங்களும் இருக்கின்றன. அதேநேரம் மனநல குறைபாடுகளில் அனேகமானவை, சாதாரணமானவையே. ஆனால் ஓரிரு வகைகள் தீவிர தன்மையைக் கொண்டவையாக விளங்குகின்றன.
இந்நோய் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் அதனை முழுமையாகக் குணப்படுத்தி விட முடியும்.
என்றாலும் இந்நோய் நிலை குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப் புணர்வும் தெளிவும் இல்லாதுள்ளது. இதன் விளைவாக மனநல குறை பாட்டுக்கும், பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளவர்கள் ஒதுக்கப் படுகின்றனர். கேளிக்கை செய் யப்படுகின்றனர். தனிமைப் படுத்தப்படுகின்றனர். ஆனால் இவை மிகவும் பிழையான நடவடிக்கைகளாகும்.
இவ்வாறான நடவடிக்கை களால் மனநலக் குறைபாடுக ளுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாகியுள்ளவர்கள் தம் அன்றாட பணிகளில் ஈடுபடவோ, மனநல ஆரோக்கிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளவோ சமூக செயற் பாடுகளில் ஈடுபடவோ, திருப்தியாக குடும்ப வாழ்வை மேற்கொள்ளவோ முடியாதவர்களாக இருக்கின்றனர். இது பெரும் கவலைக்குரிய நிலை மையாகும்.
மனநலக் குறைபாடோ, மனநலப் பாதிப்போ ஒரு தொற்று நோய் அல்ல. மனிதனின் வழமையான பேச்சு, சிந்தனையிலும், செயற்பாடுகளிலும் அவதானிக்கப்படும் மாறுதல்களும் வித்தியாசங்களும் தான் மனநல குறைபாடாகவும், பாதிப்பாகவும் அமைகின்றது. இந்நோய் நிலை ஏற் படுவதற்கு பல காரணிகளும் சூழ் நிலைகளும் துணைபுரிகின்றன. அவற்றில் மனித வாழ்வு ஓய்வு ஒழிச் சலின்றி இயந்திர மயமாக அமைவதும் ஒரு காரணம் எனக் கருதப்படுகின்றது.
இருப்பினும் இப்பாதிப்புக்கும், குறைபாட்டுக்கும் உலகில் ஆயிரக் கணக்கானோர் உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் இலங்கை சனத் தொகையில் 20 - 25 வீதத்தினர் மனநலப் பாதிக்கு உள்ளாகியுள்ளது புதிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும் பகுதியினர் சிறிய மனநலக் குறைபாட்டுக்கே உள்ளா கியுள்ளனர்.
என்றாலும் இந்நாட்டில் மனநலக் குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்களில் சுமார் எட்டாயிரம் பேர் அங்கொட தேசிய மனநல ஆரோக்கிய நிலையத்தில் சிகிச்சை பெறுவதாக அதன் பணிப்பாளர் குறிப்பிட்டார். இந்நிலையத்திற்குச் சிகிச்சை பெற வருகை தருபவர்களில் சுமார் ஆயிரம் பேரளவில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறுப்பிட்டார்.
இந்நாட்டில் மனநலக் குறைபாட் டுக்கும், மனநலப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளவர்களுக்கு சுகாதார அமைச்சின் மனநல ஆரோக்கிய பிரிவு வைத்தியசாலைகள், மற்றும் மனநல மருத்துவர்கள் ஊடாக சேவை வழங்கப்பட்டு வருகின்றன.
என்றாலும் மனநல குறைபாடு மற்றும் மனநலப் பாதிப்பு அவற்றுக்கு சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் என்பன குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண் டும். அத்தோடு உள்ளத்திற்கு அமைதி மகிழ்ச்சியளிக்கக்கூடிய வகை யிலான பொழுதுபோக்கு வசதி களில் கவனம் செலுத்த வேண் டும்.
மேலும் மனநல மேம்பாடு, மனநோய்களைத் தவிர்த்தல், சிகிச்சை அளித்தல், புனர் வாழ்வு, மனநல பாதிப்புடன் இணைந்துள்ள ஒதுக்கம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் என்பவற்றின் மூலம் இப்பாதிப்புகளைப் பெரிதும் தவிர்த் துக் கொள்ளலாம்.
ஆகவே மனநல குறைபாடுக ளையும் மனநலப் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்வதற்கு மனநல மேம்பாட்டு நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் பரவலான விழி ப்புணர்வு வேலைத் திட்டங்களும் மிகவும் அவசியமானவை. இவ் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி செயற்படும் போது மனநலக் குறைபாட்டுக்கு உள்ளாவோர் பெரிதும் குறைவடைந்து விடுவர் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment