Monday, December 29, 2014

சோளங்கன் கலையிரவு நேற்றையதினம் இடம்பெற்றது!

நேற்றையதினம் மாலை இடம்பெற்ற சோளங்கன் கலையிரவு  மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு TET மண்டபத்தில் இடம்பெற்றது. 

கனேடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, சோளங்கன் மண்ணின் பெருமைகளை எடுத்துக்கூறும் வில்லிசை என்பனவும் நாட்டு கூத்துவடிவமான காத்தவராயன் கூத்தின் ஒரு பகுதி என்பனவற்றுடன் இன்னிசைப் பாடல்களும் இடம்பெற்றது.

நமது கலைஞர்களின் கலைப்படைப்பான சோளங்கன் மண்ணின் பெருமைகளை எடுத்துக்கூறும் வில்லிசை, யாழ் நுண்கலை பட்டதாரியும் அண்ணாவியாருமான ரமணிகரன், மற்றும் அருந்தவநாதன் தலைமையில் இடம்பெற்ற “காத்தவராயன் கூத்து” என்பன சபையோரை பெரிதும் மகிழ்வித்தது. நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த இந்திய கலைஞர்களை பெரிதும் கவர்ந்து கொண்ட நிகழ்வாக அமைந்திருந்ததுடன் இவ் நிகழ்வினை எதிர்வரும் தை திருநாளான பொங்கல் தினத்தன்று தமது தொலைக்காட்சியில் ஒலிபரப்புவதற்கான அனுமதியை நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினரிடம் பெற்றிருக்கின்றது.

இவ் நிகழ்வானது முதன் முதலாக கனேடிய மண்ணில் எமது கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், ஒர் தொலைக்காட்சியில் இவ் நிகழ்வு ஒலிபரப்ப கிடைத்தமையானது எமது கலைஞருக்கு கிடைத்த ஒர் அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது. 

No comments:

Post a Comment