Wednesday, August 6, 2014

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம்!

யாழ்.வதிரி ஆலங்கட்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதன்கிழமை (06) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலையினைச் சேர்ந்தவர்களான அருளானந்தன் ராசா (வயது 25), எஸ். ஜெயரூபன் (வயது 20) மற்றும் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த மகேந்திரன் மயில்வாகனம் (வயது 53) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment