Monday, July 28, 2014

கப்புது பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந் தெரியாத அழகிய பறவை

வடமராட்சி கப்புது பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந் தெரியாத அழகிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. இம் மரத்தின் கீழ் பறவையின் எச்சம் கிடக்கும் போது வீட்டில் உள்ளவா்கள் மரத்தை அவதானித்த போதே இந்த இனந் தெரியாத பறவை முட்டையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். இரவில் மட்டுமே இப் பறவை திரிவதாகவும் பகலில் கூட்டில் அடைகாத்து இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment