உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகையின் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது.
இக்கருத்துக் கணிப்பு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.
30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டீன் 3ஆவது இடத்திலும் போப் பிரான்சிஸ் நான்காவது இடத்திலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் 5ஆம் இடத்திலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 6 ஆம் இடத்திலும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்திலும் அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் 8ஆம் இடத்திலும் பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 9 ஆம் இடம்

No comments:
Post a Comment