Saturday, January 18, 2014

செவ்வாய்கிரகத்தில் பூத்து குழுங்கும் தாவரங்கள்

செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என  விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்டச்சு பல்கலைக்கழகத்தை சேர்ந்த  சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங்  இத்தகவலை வெளியிட்டுள்ளார்


அவர் கூறி இருப்பதாவதுசெவ்வாய்  மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின்  செயற்கை மண்ணில்   14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது .இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டனஇது பொல்ல் அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.

1 comment:

  1. verry good, please update more our village news

    ReplyDelete