Sunday, April 7, 2013

மனநிலையை உற்சாகப்படுத்தும் சிறந்த உணவுகள்!!!

மனிதனின் குணங்களை ரஜோ குணம், தாமச குணம் மற்றும் சாத்வீக குணம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம். மனிதனின் இந்த குணங்களுக்கும், உண்ணும் உணவுகளுக்கும் பலத்த தொடர்பு இருப்பதை யாரும் அறிந்திருக்க
மாட்டார்கள். மிகவும் காரமான உணவுகளை உண்ணும் போது ரஜோ குணம் தலை தூக்கும். அவ்வாறு உள்ளவர்கள் அனைவரிடமும் மிகவும் உஷ்ணம் நிறைந்த வார்த்தைகளை உதிர்ப்பர்.

தாமச குணம் உடையவர்கள் தைரியத்துடனும், படபடப்புடனும் பேசுவர். சாத்வீக குணமுடையவர்கள் காரமில்லாத உணவை, இனிப்பு பதார்த்தங்களை அதிகம் உண்பர். அவர்கள் பேச்சில் பொறுமை இருக்கும்.

மனிதனின் குணத்திற்கும் உணவிற்கும் இவ்வாறு சம்பந்தம் இருக்கும் போது, மனிதனின் உற்சாகமான மனநிலைக்கும் உணவு வகைகளுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கும். உணவுகள் மட்டுமே மனதை உற்சாகபடுத்தாது என்ற போதிலும் சில உணவுகள் மூளையிலுள்ள ஹார்மோன்களை தூண்டி உற்சாகத்துக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவ்வாறு எந்த வகை உணவுகளை உண்டால் மனிதனின் மனம் உற்சாகம் அடையும் என்பதை பற்றி பலரும் அறிந்திராத விஷங்களையும், குறிப்புகளையும், அவற்றை உண்டால் எம்மாதிரியான உற்சாகம் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்.

No comments:

Post a Comment