Wednesday, April 24, 2013

உறவுகளே அவதானம்!!! போலி பெயர்களில் போலி சாமிகள்!

அண்மைய வாரங்களாக எமது ஊரில் வதியும் உறவுகளுடன் போலி பெயர்களில், போலி தொலைபேசி, மின்னஞ்சல்கள், ஸ்கைப் முகவரிகளை கொடுத்து ஏமாற்றும்  நடவடிக்கைகள் தீவிரம் பெற்றள்ளது. இந் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்கின்றோம். வெளிநாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை கூறி போலி சாமிகள் தமது கைங்கரியத்தை காண்பிக்கின்றனர்.

வெளிநாட்டுக்கு கூப்பிடுவதற்கு பெண்கள் தேவை என்று கூறி ஊரில் உள்ளவர்களை நச்சரிக்கும் கூட்டம் ஒன்று புதிதாக புறப்பட்டுள்ளது. இது குறித்து எமது மக்களை விளிப்பாக இருக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
அண்மைய நாட்களாக இந்த சம்பவங்களால் பல உறவுகள் மூக்குடைபட்ட சம்பங்கள் எமது சோளங்கன் மண்ணில் அரங்கேறியுள்ளதாக எமக்கு முறையிடப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறான போலி பெயர்வழிகளின் போலி நாடகத்தை நம்பி ஏமாற வேண்டாம். இவர்கள் கூறும் பெயர்களில் உங்களிற்கு யாராவாது வெளிநாடுகளில் வசித்தால் அவர்களுடன் தொடர்புகொண்டு அதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னரே இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களிற்கு பதிலளியுங்கள். இல்லையேல் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை முற்றாக நிராகரிக்குமாறு எமது உறவுகளை வேண்டிக்கொள்கின்றோம்.

-வெளிநாடுவாழ் சோளங்கன் மக்கள்

2 comments: