Monday, February 11, 2013

இன்று மதியம் வல்லை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் செல்லப்பிராணியான வளர்ப்பு நாய் பலி!

இன்று மதியம் 12:30 மணியளவில் வல்லை பகுதியில் திருமண வைபவத்திற்கு சென்று கொண்டிருந்த மினிபஸ் ஒன்றும் கொழும்பில் இருந்து வந்திருந்த மோட்டார் சையிக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மோட்டார் சையிக்கிளில் பயணம் செய்த 28வயதுடைய நிலைசர்மன்(கொழும்பு), பதுளையைச் சேர்ந்த 20 வயதுடைய நிரோஜன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சையிக்கிளில் வந்தவர்கள் கொண்டுவந்திருந்த அவர்களது வளர்ப்பு நாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. இது குறித்த விசாரணையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment