இன்றைய நவீன உலகத்தைச் சேர்ந்த இளசுகள் ஆண்டிற்கு சராசரியாக 336 முறை கோபப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் கோபத்திற்கு, பணப்பிரச்சினை, பசி, தூக்கமின்மை, அலுவலகத்தில் உயரதிகாரிகள் தொந்தரவு உள்ளிட்ட காரணங்கள் காரணமாக இருக்கின்றனர். லண்டனில் இது தொடர்பாக 2000 பேரிடம் கோபப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் சுவாரஸ்யமான பல தகவல்கள் தெரியவந்தன.
பிரிட்டனை பொறுத்தவரை, ஒருமாதத்துக்கு ஒவ்வொருவரும், 28 முறை கோபப்படுவதாகவும், சராசரியாக ஆண்டுக்கு, 336 முறை கோபப்படுவதாக தெரியவந்து உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
காலை நேரத்தில் தான், குறிப்பாக திங்கட்கிழமைகளில், அலுவலக நேரங்களில், கோபம் அதிகமாக ஏற்படுவதாகவும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10ல் ஆறு பேர், காரணமில்லாமல் கோப்படுவதாகவும், நான்கில் ஒருவர், கோபப்படும் போது, கட்டுப்பாட்டை இழந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
உறவினர்களால், நான்கில் ஒருவர் கோபப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொலைபேசியில் வரும் தேவையில்லாத அழைப்புகள், இன்டர்நெட் கோளாறுகள், சரியான பொருட்களை வினியோகிக்காதது, நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்தாவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், பலருக்கும் கோபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment