Friday, November 16, 2012

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க

உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம், உண்ணும் உணவுகள் தான்.
எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல் நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது.
 
அதிலும் இந்த பிரச்சனை இளம் வயதிலிருந்தே உண்ணும் உணவினாலும் ஏற்படும். ஏனெனில் அப்போது உணவுக்கட்டுப்பாடு எதுவுமின்றி, கண்டதை அதிகம் சாப்பிடுவோம். இது பிற்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, தேவையற்ற நோய்களை வரவழைத்துவிடும்.

எனவே, இத்தகைய பிரச்சனைகளை தடுக்க எந்தவிதமான உணவுகளை சாப்பிட்டால், சரியாகும் என்று ஒரு சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை என்னவென்று படித்து பார்த்து, அந்த உணவுகளை உண்டு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

No comments:

Post a Comment