பனிக்காலம் அல்லது மழைக்காலத் தில் தூரத்தே புகையிரதம் செல்கின்ற சத்தமோ அன்றி ஏனைய வாகனங்கள் செல்கின்ற சத்தமோ சாதாரண நாட்களைப் பார்க்கிலும் மிகத் துல்லியமாக கேட்பதை உங்களால் உணர முடியும்.
வழமையில் எமது காதுகளுக்குக் கேட்காத ரயில் சத்தம் குளிரான காலநிலையில் மட்டும் தெளிவாக எமக்குக் கேட்பதன் காரணம் என்ன?
அடர்த்தியான ஊடகத்தின் ஒலி அலைகள் இலகுவாகக் கடத்தப்படு கின்றன.
சாதாரண நாட்களைப் பார்க்கிலும் குளிர் காலங்களில் வளியில் ஈரப்பதன் மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது வளியின் செறிவுத்தன்மை உயர்வாகக் காணப்படும். எனவே ஒலி அலைகள் இலகுவாக தடையின்றிப் பயணம் செய்து எமது காதுகளை வந்தடைகின்றன. இதனால்தான் அச்சத்தத்தை எங்களால் முழுமையாகக் கேட்க முடிகிறது.

No comments:
Post a Comment