Wednesday, October 24, 2012

நெல்லியடி சந்தைப் பகுதியில் தீ விபத்து

நேற்று நெல்லியடி புதிய சந்தைப் பகுதியின் கிழக்குப் பக்கமாக உள்ள ஆஷா ரேடர்ஸ் என்ற கடையிலேயே இவ்வாறு தீ பற்றி எரிந்து பரவத் தொடங்கியது. பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் துணையுடன் தீ பரவுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இருப்பினும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த  விற்பனைப் பொருட்கள் பல எரிந்து சாம்பலாகியுள்ளன. இதன் மதிப்பீடு சுமார் இரண்டு இலட்சம் வரை இருக்குமென நெல்லியடிப் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்பதால் கடையில் இருந்த சுவாமிப் படத்திற்கு ஏற்றி வைக்கப்பட்ட விளக்கிலிருந்து தீ பரவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் மழைபெய்ததால் தீ பலமாகப் பரவவில்லை.

 
இதேவேளை சமீபத்தில் நெல்லியடி - யாழ் பிரதான வீதியில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து எற்பட்டு கடை முற்றாக எரிந்து சாம்பலாகியிருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.    

No comments:

Post a Comment