தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வருகின்ற மக்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் தொண்டமானாறு ஆற்றுக்கு குறுக்காக புதிய வீதி அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நிதியுதவியுடன் அந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது. பிரதேச சபைத் தலைவர், உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரின் பங்களிப்புடன் அந்த பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வீதிப்புனரமைப்பு பணி தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் உதயகுமாரிடம் கேட்டபோது,
'செவ்சந்நிதிக்கு வருகை தரும் மக்கள் கடந்த காலத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இதனால் ஆலயத்திற்கு வருகை தரும் மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பிரதேச மக்களின் நிதியுதவியுடன் அந்த பாதை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இரவு பகலாக பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் இந்தப்பதையினை புனரமைத்து மக்களின் போக்குவரத்துக்கு பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments:
Post a Comment