சூரிய ஆற்றலைச் சேமித்து மின்சாரமாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் அதிக அளவில் வந்துவிட்டது. சூரிய ஆற்றலால் இயங்கும் வாகனங்களும் வந்துவிட்டன. இப்போது சூரிய ஆற்றல் விமானத்தையும் உருவாக்கிவிட்டார்கள்.
இந்த விமானத்தில் 193 அடி நீளத்திற்கு இறக்கைகள் அமைந்துள்ளன. அவற்றில் 12 ஆயிரம் சூரிய மின்கலன் தகடுகளைப் பொருத்தி அதன் மூலம் சூரிய ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
இந்த ஆற்றலின் மூலம் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம் இதுவரை இல்லாத புதிய முறையாகும். கடந்த மே மாதம் 24ம் திகதி சோதனைப் பறத்தலும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டின் பேயர்ன் விமானப்படை விமான நிலையத்திலிருந்து இந்த சூரிய விமானம் பறக்கவைக்கப்பட்டது. 2014ம் ஆண்டிலிருந்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த விமானம் தயாராகிவிடுமாம்.
No comments:
Post a Comment