Friday, August 3, 2012

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அரையாண்டு காலப்பகுதியில் 71 ஆயிரம் நோயாளர்களுக்கு சிகிச்சை

இவ் வருடம் ஜனவரி முதல் யூன் வரையிலான அரையாண்டு காலப்பகுதியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாயர்கள் பிரிவில் 71 ஆயிரத்து 294 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாக இவ் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.வினோதன் தெரிவித்தார்.

அத்துடன் இக் காலப்பகுதியில் இவ் வைத்தியசாலையின் உள்ளக விடுதியில் சுமார் 9 ஆயிரத்து 744 நோயாயிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இதேவேளை இங்கு நடைபெற்று வரும் 19 வகையான கிளினிக் சிகிச்சையின் போது அரையாண்டு காலப்பகுதியில் சுமார் 40 ஆயிரத்து 140 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும்  அவர் கூறினார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயளிகளுள் ஆயிரத்து நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக  குறித்த அரையாண்டு காலப்பகுதியில் யாழ்.போதனா மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தைமாதம் முதல் யூன் மாதம் வரையில் இங்குள்ள மகப்பேற்று நிலையத்தில்  சுமார்முன்னூற்று ஆறு குழந்தைகள்  பிறந்துள்ளன இதேகாலப்பகுதியில் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டிருந்த நோயளிகளுள் 29 பேர்கள் உள்ளக விடுதிகளில் இறந்துள்ளனர். வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டி. வினோதன் இத்தகவலை தெரிவித்தார்.

No comments:

Post a Comment