Monday, August 20, 2012

பிரான்ஸில் மாடுகளுக்கு தினசரி 2 போத்தல் வைன்

ஐரோப்பாவிலேயே மாடுகளிலிருந்து மிகச் சிறந்த இறைச்சியைப் பெறும் முகமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பண்ணையாளர்கள் தினசரி 2 போத்தல் தரமான வை னை அவற்றுக்கு அருந்தக் கொடுத்து வருகின்றனர். மேற்படி வைன் அருந்திய மாடுகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ‘வின்டோவின்’ ௭ன்ற வியாபார சின்னத்துடன் விற்பனைக்கு விடப்படுகிறது. 

வைன் அருந்திய மாடுகளிலிருந்து பெறப்பட்ட சுவையான இறைச்சி குறித்து ஏற்கனவே பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள உணவகங்களில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென் பிரான்ஸிலுள்ள 3 மாடுகளுக்கு 4 மாதங்களுக்கு தினசரி 2 போத்தல் வைனை அருந்துவதற்கு வழங்கி மேற்படி மாடுகளின் இறைச்சியின் தரம் பரிசீலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment