Thursday, February 9, 2012

மனித உடலுக்குத் தேங்காய் மிகவும் நல்லது!

தமிழர்களின் மரக்கறி, மீன், இறைச்சிக் கறிகளிலும் சம்பலிலும் அதிகளவில் தேங்காய் பால், எண்ணை மற்றும் துருவல் பயன்படுத்தப் படுகிறது. இது பன்நெடுகாலமாக நிலவும் பாரம்பரிய சமையல் முறை.

அண்மையில் மிகவும் தவறுதலான அபிப்பிராயம் இது பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாதவர்களால் பரப்பப்படுகிறது. தேங்காய்ப் பால், எண்ணை துருவல் ஆகியவற்றில் கொழுப்புச் சத்து இருப்பதாகவும் அது மனித உடலுக்குக் கெடுதல் விளைவிப்பதாகவும் கூறுவோர் உண்மைக்கும் புறம்பான செய்தியைக் கூறுகின்றனர்.சூரியகாந்தி, மரக்கறி, சோயா, சோளம் ஆகியவற்றின் எண்ணைகளில் இருக்கும் கொழுப்புக்களிலும் (Cholesterol Level) பார்க்கத் தேங்காய் எண்ணை, பால், துருவல் ஆகியவற்றில் இருக்கும் கொழுப்பு ஒப்பீட்டில் மிகக் குறைவு.

தேங்காயில் இருந்து பிழியப்படும் முதலாவது தடித்த பாலை வேர்ஜின் தேங்காய் எண்ணை (Virgin Coconut Oil) தயாரிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள. இந்த எண்ணையில் அதிக உணவுச் சத்துக்கள் இருக்கின்றன. அவை உடனடி உடல் உற்சாகத்தைக் கொடுக்கின்றன (Instant Energy) வேர்ஜின் தேங்காய் எண்ணைக்கும் வேறு விதமாகத் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணைக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இல்லையென்று உணவு ஆய்வுகள் தெருவிக்கின்றன. இரண்டு மேசைக் கரண்டி வேர்ஜின் தேங்காய் எண்ணையின் உணவுச் சத்து (Nutrition) பாதித் தேங்காயின் பாலுக்குச் சமம் என்று அதே ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் உறுப்புக்களை சுறுசுறுப்பாக இயங்கவைக்கும் எனேர்ஜி டிரிங்ஸ் (Energy Drinks) தயாரிப்பில் தேங்காய்ப் பால் பயன்படுத்தப்படுகிறது. தேநீரில் கலப்பதற்;க்கும் தேங்காய்ப் பால் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. தேங்காய்ப் பால் எண்ணைப் பாவனையை ஒதுக்கிய அமெரிக்க மருத்துவார்கள் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பசுபிக் மாகடல் பிராந்தியத்தில் காயமடைந்த அமெரிக்கப் போர் வீரர்களுக்கு இரத்தத்திற்க்குப் பதிலாக தேங்காய் நீரை உடலில் ஏற்றினார்கள். இதனுடைய உயிர்காக்கும் திறன் இதன் முலம் நிருபிக்கப்படுகிறது.

தேங்காய்ப் பாலை சமையலில் சேர்க்கும் போது அது கொலெஸ்ரெறோல் குறைந்த உணவுத் தயாரிப்புக்கு உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. உடலில் கொழுப்பாக அது உறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய்ப் பால் எண்ணை துருவல் பாவனையால் கிடைக்கும் நன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

1.கொலஸ்ரெறோல் கொழுப்பு மிகவும் குறைந்தது.
2.உணவுச் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
3.தோல் சுருங்குவதைத் தடுக்கிறது.
4.உடல் குளுக்கோஸ் அளவைச் சீராக்குகிறது.
5.வைரஸ் கிருமித் தொற்றுக்களைத் தடுக்கிறது.
6.தைரோயிட் சுரப்பிகளை இயக்குகிறது.
7.செல்கள் ஹோமோன்களை வலுப்படுத்துகிறது.
8.உடல் எடையைக் குறைக்கிறது.
9.நினைவாற்றலைக் கூட்டுகிறது.
10.உணவுகளுக்குச் சுவையுட்டுகிறது.

தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கீறீம்கள் முகப் பூச்சாகப் பாவிக்கப்படுகிறது. அழகுக் கலை நிபுணர்கள் இந்த வகைக் கீறீம்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

மேலும் சித்த மருத்துவ நூல்களின்படி தேங்காயில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதம், மாவுச் சத்து, கால்சியம், பொஸ்பரஸ், இரும்பு உட்படத் தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, பி கொம்பிளெக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என்ற உடல் இயக்கத்திற்குத் தேவையானவை தேங்காயில் உள்ளன.

சித்த மருத்துவத்தில் தேங்காய் எண்ணை மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. தேமல், படை, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு தேங்காய் எண்ணையும் தேங்காய்ப் புண்ணாக்கும் மருந்தாகப் பயன்படுகின்றனர். தேங்காய் சிரட்டையில் இருந்து பிழியப்படும் எண்ணையும் அதே மாதிரிப் பயன்படுகிறது.

தேங்காய்ப் பால் நஞ்சு முறிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணையில் இருந்து தயாராகும் தைலங்கள் நோய்களை முறிக்கின்றன. அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் நிவாரணம் அளிக்கிறது. அமினோ அமிலங்கள் தேங்காய்ப் பாலில் உள்ளதால் அவை உடலுக்கு ஊட்டச் சத்தாகின்றன.

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறார்கள. தென்னையைக் கற்பகதரு என்றும் பாராட்டுவார்கள். தேங்காயைப் பற்றிய தவறான கருத்துக்களைக் களைந்து அதனுடைய பயனைப் பெறுவோமாக.

No comments:

Post a Comment