Sunday, October 9, 2011

சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி பூஜையும் கலைநிகழ்வும்!

இணைப்பு-2
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
சோளங்கன் நூல் நிலையத்தில் இடம்பெற்ற விஜயதசமி பூஜையும் மறுநாள் இடம்பெற்ற மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும், கலை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சு போட்டி, வினாவிடை போட்டிகளில் பங்கேற்றிய மாணவருக்கான பரிசளிப்பும் இடம்பெற்றதுடன்,கும்பி நடனம், காவடி நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றது. இடம்பெற இருந்த பட்டிமன்றம் நேரமின்மை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.


நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு பெருமளவு மக்கள் குடியிருந்தனர். சோளங்கன் கிராமத்தின் வரலாற்றிலேயே முதன் முதலாக இடம்பெற்ற கலை நிகழ்வாக இந்த கலை நிகழ்ச்சியையும், மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளையும் எமது மக்களே பாராட்டி,  ஒழுங்கமைத்த நம் நூல் நிலையத்தின் இளைஞர்களையும் பாராட்டினர்.

அனுமதி வழங்கப்பட்ட நேரவறையறைக்குள் நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகளை நிறுத்தி கொள்ள வேண்டிய நிலை தோன்றியதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment