Sunday, October 2, 2011

சோளங்கன் நூல் நிலையத்தில் விஜயதசமி

இணைப்பு-2

சோளங்கன் நூல் நிலையத்தில் வருடாவருடம் இடம்பெறும் விஜயதசமி இவ்வாண்டும் சிறப்பாக நடாத்துவதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.சமய வழிபாடுகளை தொடர்ந்து சிறுவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளன.

மழலைகளின் வரவேற்பு நடனம்*மழலைகளின் பேச்சு போட்டிகள், பாடல் என்பனவற்றுடன் மழலைகளின் காவடி நடனம்.

*நடுத்தர சிறார்களின் கும்மி நடனம், காவடி நடனம்

*பேச்சு மற்றும் திருக்குறள் போட்டி

*ஆண்டு 1- தொடக்கம் ஆண்டு-11 வரையிலான மாணவ, மாணவியருக்கான சமய போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும் இடம்பெறவுள்ளது.

*இறுதியாக சோளங்கன் வாழ் இளைஞர்கள், யுவதிகள் வழங்கும் "பட்டிமன்றம்"

"சமய சொற்பொழிவு" போன்ற நிகழ்ச்சிகளுடன் இடம்பெறவுள்ள விஜயதசமி நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளை  கண்காணிப்பதற்காக நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் ஆசியரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதம விருந்தினராக கரணவாய் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு.கிருஷ்ணகரன் அவர்களுடன் ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இறுதியாக நூல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழலைகள் ப+ங்கா திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த "மழலைகள் பூங்கா" மூலம் சிறார்களின் விளையாட்டுத்திறனையும் அவர்களது உத்வேகத்தையும் ஊக்குவிப்பதற்கு உந்து சக்தியாக இந்த "மழலைகள் பூங்கா" திறந்து வைக்கப்படவுள்ளது.

இது போன்று இன்னும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு சோளங்கள் நூல் நிலைய நிர்வாகம் எண்ணியுள்ளதாகவும் இதற்கு புலம்பெயர் வாழ் நமது உறவுகள் கைகொடுத்து உதவிட வேண்டும் என்று நூல் நிலையத்தின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment