சோளங்கன் சனசமூக நிலையம் பல்வேறு பிரிவுகளை கொண்டதாக விரிவாக்கம் பெறுகின்றது. இளைஞர்களின் துடிப்பான செயற்பாடுகளுடன் சிறுவர் பாடசாலை, மகப்பேற்று தாய்மார்களிற்கான சத்துணவு கூடம் என்பனவற்றை கொண்டதாக விரிவாக்கம் பெறுகின்றது.
இதற்காக நூல் நிலையம் விரிவாக்கப்படுகின்றது. இளைஞர்களின் கடின உழைப்புடன் ஊர் மக்களும் வழங்கிய நிதியுதவியுடன் நூல் நிலையத்திற்கான கட்டிடம் அகலப்படுத்தப்பட்டு பல பிரிவுகளையும் உள்ளடக்கிய நூல் நிலையமாக மிளிர்ந்து வருகின்றது. இளைஞர்களின் இந்த முயற்சிக்கு வெளிநாடுவாழ் நமது ஊரின் உறவுகள் உதவிடுமாறு கேட்கப்படுகின்றனர்.
நீங்கள் ஒவ்வொருவரும் வழங்கும் சிறு சிறு உதவிகளை கொண்டு நூல் நிலையத்தை விரிவாக்கம் செய்து சமுதாயத்தின் வளர்ச்சிக்குரியவகையில் வடிவமைத்து எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல சிந்தனையை எமது நூல் நிலையம் ஊடாக வழங்கிட முடியும்.
ஆகவே புலம்பெயர் வாழ் எமது உறவுகள் உங்களால் ஆன உதவிகளை வழங்கி நூல் நிலையத்தின் வளர்ச்சிக்கு உதவிடுமாறு கேட்டுகொள்கின்றோம்.
enrum kai godupen
ReplyDelete