Monday, February 7, 2011

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

இன்று மதியம் கரவெட்டி பிரதேசசபை முன்னே இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று மதியம் வேகமாக சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரமாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவருடன் மோதியபடி அருகில் உள்ள  பிரதேசசபை அலுவலக மதிலுடன் மோதியது. இதன்போது லொறியினால் மோதுண்ட இளைஞர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார் சாரதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment