Wednesday, January 19, 2011

வல்லைவெளியில் மோட்டார் சையிக்கிள் விபத்து ஒருவர் பலி

வல்லைவெளியில் இடம் பெற்ற மோட்டார் சையிக்கிள் விபத்தில் காயம் அடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணம் அடைந்துள்ளார். சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த 65 வயதுடைய இராசா முருகையா என்பவரே நேற்று மரணம் அடைந்தவராவார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அவரது மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மோட்டார் சையிக்கிளில் வல்லை வீதியில் மனைவியுடன் பயணித்துக் கொண்டு இருந்த வேளையில் தலைக்கவசம் காற்றுக்கு கழன்று பறந்ததாகவும் அதனை பிடிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சையிக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

   சம்பவ இடத்தில் மயக்கமடைந்து அபாயமான நிலையில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டார். யாழ். போதனா வைத்திய சாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

No comments:

Post a Comment