Thursday, January 6, 2011

வடமராட்சிப் பிரதேசத்தில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த குழுவொன்று பொலீஸாரால் கைது

வடமராட்சிப் பிரதேசத்தில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த 5பேர் கொண்ட குழுவினர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ஒருவரின் சைக்கிளை திருட்டுக்கும்பல் ஒன்று திருடிச் செல்வதை அவதானித்த தோட்ட வேலை செய்தவரின் சகபாடி அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மாலு சந்தியில் வைத்து ஒருவரை மடக்கி பிடித்த போது ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டவர் நெல்லியடிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச் சந்தேக நபரிடம் பொலி ஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, வடமராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் இவர்கள் குழுவாகத் திருடியது தெரியவந்ததுடன் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்து 19 சைக்கிள்கள் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment