Tuesday, December 14, 2010

தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - செல்போனில் அசிங்கமான காட்சிகள்

ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதற்கென பஸ்ஸிற்காக காத்திருந்தேன். பஸ் வருகை நெடுநேரம் தாமதித்ததால் அருகில் இருந்த தேநீர்க்கடை ஒன்றிற்குச் சென்று தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அவ்வேளையில் இரு இளைஞர்களின் சம்பாசனைகள் எனது காதுகளுக்கும் எட்டியது. ஊர்ப் புதினம் அறிவதென்றால் அதுவும் மற்றவர்களைப் பற்றியதென்றால் எமது தமிழ்ச்சமூகத்திற்கு நிகராக முடியாது என்ற படியால் அவர்களின் உரையாடலில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள் எனது காதுகளையும் தழுவியது. தேநீர் குடிக்கும் சாக்கில் அவர்களின் சுவாரசியமான சங்கதிகளைக் கேட்டதனால் பஸ்ஸைத் தவறவிட்டது வேறுவிடயம். அவ்விளைஞர்களின் உரையாடலின் சுருக்கத்தை வடிகட்டி உங்களுக்குத் தருகிறேன்.

அந்த பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் படிக்கும் உயர்தர வகுப்பு மாணவியுடன் இன்னொரு ஆண்கள் பாடசாலையில் படிக்கும் உயர்தர வகுப்பு மாணவனுக்கு காதலாம். ஆனால் பிரஸ்தாப பெண்பிள்ளையின் மீது வேறு இளைஞர்களும் கண் வைத்திருந்தார்களாம். எது எப்படியோ, அந்த மாணவி தனது முதல் காதலனான குறித்த மாணவனுடனேயே மையல் கொண்டிருந்தாளாம். இதை சகித்துக் கொள்ள முடியாத மற்ற இருவரும் அந்த மாணவியைப் பழிவாங்கத் துடித்தார்களாம். இதற்குக் காலமும், நேரமும், சூழலும் கனிந்து வரவே குறிப்பிட்ட மாணவி தனது நிஜக் காதலனுடன் காதல் என்ற இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கையில் அந்த (அலங்கோல) காட்சிகளை இரகசியமான முறையில் தமது செல்போன் கமராவுக்குள் சிக்கவைத்துக்கொண்டார்கள்.பிறகு சொல்லவா வேணும்? அவர்களது காதல் லீலைகள் அடங்கிய காட்சிகள் சக வகுப்பு மாணவர்களின் செல்போன்களுக்கு அனுப்பி இப்படி அந்த அசிங்கமான காட்சிகள் பலரது செல்போன்களுக்குள்ளும் புகுந்து விளையாடியதாம்.

இதுதான் அந்த இளைஞர்கள் கூறிய விடங்களின் சுருக்கமான பகுதி.இப்படியாக யாழ் குடாநாட்டுப் பெண்களின் ஒழுக்கத்துடனும் எதிர்கால வாழ்க்கையுடனும் விளையாடும் பல சம்பவங்கள் படக்காட்சிகள் வடிவில் தாராளமாகவே உலாவருவதாகப் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றது. தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியினால் ஒருபுறம் நன்மையான விடயங்களை அறுவடை செய்தாலும் மறுபுறம் தீமையான விளைவுகளும் தொடரவே செய்கின்றன. இது குறித்து நாம் தெளிவுடனும், விழிப்புடனும் இருக்கத் தவறினால் எமது அப்பாவிப் பெண்களின் வாழ்வு மிலேச்சத்தனமான முறையில் சூறையாடப்படுவதை யாராலுமே தடுக்கமுடியாது போய்விடும்.பெரும்பாலான அப்பாவிப் பெண்கள் தனது காதலுடனோ அல்லது ஆண்துணை ஒருவருடனோ நெருக்கமாக இருக்கும் அலங்கோல காட்சிகளை சிலர் நயவஞ்சகத்தனமாக இரகசியமான முறையில் செல்போன் கமராவுக்குள் மிகவும் கச்சிதமாக சிக்கவைத்து விடுகின்றனர்.
இத்தகைய காட்சிப்பதிவுகள் அப்பெண்களுக்கு தெரிந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது வேறுவிடயம். இத்தகைய பல அப்பாவிப் பெண்களின் கற்பை, வாழ்க்கையைக் காவுகொள்ளும் காட்சிகள் பலரது செல்போன்களுக்குள்ளும் ஊடுருவிப்பரவுவதால் எமது தமிழ்ப்பெண்பிள்ளைகளின் வாழ்வு சூனியப்படுத்தப்படுகின்றது. இது எமது ஒட்டு மொத்த பெண் குலத்திற்கே இழுக்கான விடயமாகும். எனவே இது குறித்துப் பெண்கள் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இது இவ்வாறிருக்க முன்னரெல்லாம் யாழ்ப்பாணத்துப் பெண்களின் நிலை மிக உன்னத இடத்தில் இருந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மகோன்னத வாழ்க்கை முறை அன்று யாழ்ப்பாண வாழ்வியலில் பின்னப்பட்டிருந்தது. நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தில் ஒரு கட்டத்தில் குறிப்பிடும் வசனங்கள் இங்கு சிந்திக்கற்பாலது. தான் திருமணம் செய்வதாக இருந்தால் கற்புள்ள ஒழுக்கமான ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். இதற்கு இந்தியாவில் அதாவது தமிழ் நாட்டில் கூட ஒழுக்கம் மிக்க ஒரு பெண்ணைத் தேடுவதென்பது அரிது. ஏனைய நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால் கற்பு நிறைந்த ஒழுக்கமான பெண் ஒருத்தி இருப்பாளெனில் அது யாழ்ப்பாணத்தில்தான் சாத்தியப்படும் என்கிறார்.
நடிகர் விவேக்கின் நகைச்சுவைகள் சிரிப்பை வரவழைப்பவையாக இருப்பினும் சிந்திக்கத் தூண்டுபவையாகவும் உள்ளவை. அப்படிச் சிந்திக்க வைக்கும் நகைச்சுவையூடாக யாழ்ப்பாணப் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார். ஆனால் அவர் இத்தகைய அலங்கோலக் காட்சிகளை கண்டால் நிச்சயம் மனம் வெதும்புவார் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய சூழமைவில் எந்த ஒரு ஆணும் சரி பெண்ணும் சரி நூறு வீதம் தப்புச் செய்யாதவர்கள் என்று கூறமுடியாது. உடலாலோ சரி மனதாலோ சரி தப்பு செய்தவர்கள் தான். இதனால்தான் ஒரு கவிஞர் கூறுகிறார் 'எல்லாப் பெண்களும் ஒரு வகையில் விபச்சாரிகள்தான் எனது தாயைத்தவிர' என்கிறார். தனது தாயைக் கேவலப்படுத்த எந்தவொரு உயிரும் விரும்புவதில்லை என்றபடியால் தனது தாயைத்தவிர அனைவரும் விபச்சாரிகள் என்கிறார்.யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை பெண்கள் முன்னர் வீதிகளில் அநாவசியமாக செல்லமாட்டார்கள். ஆனால் தற்போது எங்கும் எப்பவும் பெண்களைக் காணலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களில் தமது தோழியருடன் சேர்ந்து ஊர் சுற்றுவது. சினிமாப்படம் பார்க்கத் திரையரங்குகளுக்குச் செல்வது, எதிர்ப் பாலினரைக் கவர்வதற்காக அளவுக்கதிகமான அலங்காரங்கள், உடை அலங்காரங்கள் செய்வது, தேவையில்லாமல் ஆண்களுடன் அரட்டை அடிப்பது என யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களுக்கே இருக்கக் கூடாத பல தீய நடத்தைகள் தற்போது அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களின் மனங்களில் நாராசமாக வந்து விழுகின்றன.
குடாநாட்டில் தற்போது சட்டம் ஒழுங்குகள் மிகவும் சீர்கெட்டு வருகிறன. என்னவும் செய்யலாம்; எப்படியும் வாழலாம் என்ற மனநிலை மக்களின் மனங்களில் வேர்விட்டுள்ளது. இன்று நாம் சுயநலவாதிகளாக அதிக சொத்து சுகத்திற்கு ஆசைப்பட்டும் பட்டம் பதவிகளுக்கு அடிமைப்பட்டும் எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் காணப்படுகின்றோம். அந்தளவிற்கு எமது கலாசார விழுமியங்கள், பண்பாட்டுக்கோலங்கள் எல்லாம் சிதைவடைந்து சென்று கொண்டிருக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டிய தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு அனைவரிடத்தும் உண்டு.
எமக்கு ஏன் வீண்வேலை என்று தட்டிக்கழிக்கும் மனப்பான்மையிலிருந்து நாம் முற்றாக விடுபட வேண்டும். அத்துடன்,குடாநாட்டு பெண்பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல் மேற்படி சம்பவங்களைப்போல பல சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கமுடியாது. இந்நிலை மேலும் தொடருமேயானால் வேண்டத்தகாத கர்ப்பத்திற்கும் அதன் வழி சிசுக்களை தெருவோரத்தில் வீசி விட்டுச் செல்லும் பாதகத்திற்கும் வித்திடும் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, இளைஞர்களே புனிதமான தாம்பத்திய உறவை அதாவது அந்தரங்கமாக நாலு சுவர்களுக்குள் நடக்கும் இரகசிய உறவை பரகசியப்படுத்தி கேவலமாக்க முயலாதீர்கள் என்பதே இவ்விடத்தில் நாம் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள். இது விடயத்தில் பெண்கள் தான் அதிக வழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் சமூத்தின் பார்வையில் பெண்கள் தான் அதிகம் சிரத்தைக்குரியவர்களாக விளங்குவதால் சமூகத்தின் பார்வை இவர்கள் மீதே குவிகின்றது. எனவே எமது இனத்தின் இருப்பை நிலைபெறச் செய்திடப் பாடுபடவேண்டும்.

No comments:

Post a Comment