Saturday, November 20, 2010

கார்த்திகை தீபம்

இன்று கார்த்திகை விளக்கு ஏற்றி ஆலயங்கள், வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாடப்படும். இன்றைய நாளில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், வீடுகள், தோட்டங்கள், மாட்டு பட்டிகள், வேலை தளங்கள் எங்கும் தீபம் ஏற்றி கொண்டாடப்படுவதுடன். சிறுவர்கள் வீட்டின் முன்னால் வாழைக்குற்றியில் தேங்காய் சிரட்டை வைத்து தீபம் ஏற்றியும், வீட்டின் முகப்பு மதில்களின் மீது சிறிய தீப சட்டிகள், சோடா மூடிகள் கொண்டு சிறிய சிறிய தீபங்கள் ஏற்றி தீப திருநாளை சிறப்பாக கொண்டாடுவர்.

No comments:

Post a Comment