Wednesday, November 17, 2010

தொழில்நுட்ப உலகின் அண்மைய சில முக்கிய நிகழ்வுகள்

தொழில்நுட்ப உலகில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வுகள்

பேஸ்புக்கின் மெசேஜிங் சேவை
அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு சேவையாகும். ஆரம்பத்தில் மின்னஞ்சல் சேவையெனக் கூறப்பட்டது. எனினும் இது ஒரு மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் வசதியுடன் கூடிய மெசேஜிங் சேவையென பேஸ்புக் அறிவித்துள்ளது.

பேஸ்புக் கணக்குகளைத்தாக்கிய புதிய பக் (Bug)
பேஸ்புக் கணக்குகளைப் புதியதொரு பக் (Bug) தாக்கியது.
இதன் காரணமாக பலரின் கணக்குகள் செயலிழந்துள்ளதாக பேஸ்புக்கிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை கூடிய விரைவில் சரி செய்வதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.

மீண்டும் பிற்போடப்பட்ட கூகுளின் 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு
கூகுள் நிறுவனத்தின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொறு இயங்குதள தொகுப்பான அண்ட்ரோயிட் 2.3 'ஜிஞ்ஞர் பிரட்' வெளியீடு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளமானது உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயர் பொக்ஸ் 4 பீடா வெளியீடு

பிரபல இயங்குதளமாக மொஸிலா பயர்பொக்ஸ் 4 சோதனைத் தொகுப்புக்களை (Betra) தற்போது வெளியிட்டுள்ளது. முன்னையதை விட நன்கு மேம்பட்ட கிராபிக்ஸ் வசதி, ஜாவா வசதியினை இது தரவல்லது என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

40 நாட்களில் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 மொபைல்களை விற்பனை செய்த எல்.ஜி 

பிரபல எல்.ஜி (LG) நிறுவனம் சுமார் 1 மில்லியன் அண்ட்ரோயிட் 2.2 இயங்குதள ஒப்டிமஸ் ரக மொபைல்களை விற்பனை செய்ததாக அறிவித்தது.

இது தனது விற்பனை வரலாற்றில் ஒரு மைல் கல்லென எல்.ஜி. அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டியானி (Tianhe) - 1 A உலகின் அதிவேக சுப்பர் கணினியை முந்தும்
கணினியை வெளியிடவுள்ள அமெரிக்கா

உலகின் அதிவேக கணினி டியானி (Tiahne) - 1 A என ஏற்கனவே செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இக் கணினியின் வேகத்தை முறியடிக்கக் கூடியதும் இதனை விட 8 மடங்கு வேகமானதுமான ஒரு கணினியை 2012இல் அமெரிக்கா வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment